"இந்தியாவைக் காப்பாற்றுவோம் என்பது வேடிக்கை" சீமான் கருத்து!

"இந்தியாவைக் காப்பாற்றுவோம் என்பது வேடிக்கை" சீமான் கருத்து!

காவிரி விவாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுவிட்டு இந்தியாவை காப்பாற்றுவோம் என கூறுவது வேடிக்கையாக உள்ளது என சீமான் தெரிவித்துள்ளார். 

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, கள் மதுபானம் அல்ல என அரசியல் சாசனம் சொல்கிறது. புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா போன்ற பல்வேறு
மாநிலங்களில் கள் விற்பனைக்கு அனுமதி உள்ளது. மதுக்கடைகளும் உள்ளது. அந்த மாநில முதல்வர்களுக்கு
சாராய ஆலைகள் இல்லை. ஆனால் இங்கு முதல்வராக இருப்பவர்களுக்கு சாராய ஆலைகள் உள்ளது.  தமிழகத்தில் நாம் முதல்வரை தேர்வு செய்யவில்லை. சாராய ஆலை அதிபர்கள் கையில் ஆட்சி பொருப்பு வழங்கபட்டுள்ளது. கள்ளுக்கடைகள் திறந்தால மதுபான விற்பனை குறைந்து விடும். அதனால் கள்ளை மது என்று தடைவித்துள்ளனர்.  மதுபானங்கள் என்ன கோவிலில் வழங்கும் தீர்த்தமா? என கேள்வி எழுப்பினார்.

காவிரியில் தண்ணீர் தர மறுக்கிறது காங்கிரஸ் அரசு. ஆனார் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் தொகுதி பங்கீடு தர வேண்டும். தேர்தலில் இடம் கொடுத்து காங்கிரஸ் வெற்றி பெற்றால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க உறுதி அளிப்பார்களா? என கேள்வி எழுப்பிய அவர், காவிரி பிரச்சனையில் உரிய தண்ணீரை பங்கிட்டு வழங்கினால் தேர்தலில் பங்கீடு வழங்கப்படும். இல்லையென்றால் கூட்டணியில்  இருந்து வெளியேற வேண்டும் என கூறினால், இந்த நாட்டு மக்களின் நலனுக்காக சிந்திக்கிறீர்கள் என்று கூறலாம்.  அதை விட்டுவிட்டு இந்தியாவை காப்பாற்றுவோம் என கூறுவது வேடிக்கையாக உள்ளது என காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள திமுகவை விமர்சித்தார். 
 
ராமேஸ்வரத்தில் மோடி தேர்தலில் நின்றால், தேர்தலில் நானும் நிற்பேன். பிஜேபி நிற்கும் இடங்களில் திமுக நேரடியாக போட்டியிடாது. கடந்த தேர்தலில் பாஜகவை நேரடியாக எதிர்த்து நின்ற திமுக வெல்லவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பலமான  வேட்பாளரை நிறுத்தினால் அவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வாபஸ் பெற்றுக் கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட்டு ஆதரிப்பதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க: "துறைமுகங்கள் விரிவாக்கத்திற்கு ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும்" அமைச்சர் எ.வ.வேலு!