"Full protection".. சென்னையில் வாக்கு பெட்டிகள் இருக்கும் அறைக்கு சீல்

சென்னையில் உள்ள 15 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீல் வைக்கப்பட்டது.

"Full protection"..  சென்னையில் வாக்கு பெட்டிகள் இருக்கும் அறைக்கு சீல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியோடு நிறைவடைந்தது. மாலை 6 மணிக்கு மேல் வாக்கு எண்ணும் மையங்களில்  கட்சி பிரமுகர்கள் முன்பு, வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டது.

குறிப்பாக சென்னையில் 200 வார்டுகளுக்கு, 5 ஆயிரத்து 794 வாக்கு எண்ணூம் மையங்களில் வாக்கு பதிவு நடைபெற்றது. இவை தேர்தல் ஆணையம் அறிவித்ததுபோல 15 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தேர்தல் அதிகாரிகள் முன்பு அவை ஒவ்வொரு அறைக்கும் எடுத்து செல்லும் பணி நேற்று மாலையிலிருந்து நடைபெற்று வருகிறது. சில இடங்களில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இரவும் முழுவதும் வாக்கு பெட்டிகளை வாக்கு மையங்களில் அடுக்கும் பணி  நடைபெற்றது.

பின்னர் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தேர்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அறையிலும் ஜன்னல்கள் அடிக்கப்பட்டு,4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தேர்தல் அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது. சென்னை முழுவதும் 15 இடங்களில் வைக்கப்பட்டுள்ள வாக்கு பெட்டிகளை பாதுகாக்க அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.