கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு : அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. எனவே இன்று அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு : அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி!!

கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணி முதல் நாளை காலை 5 மணி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மாநகர பேருந்துகள் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல ஆட்டோக்கள் ஓடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் சேவை இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானம், ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் சொந்த வாகனம் அல்லது வாடகை வாகனங்களில் செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணத்தின்போது அதற்கான டிக்கெட்டை வைத்திருக்க வேண்டும்.

மின்சார ரெயில்களை பொறுத்தவரை 50 சதவீதம் இயக்கப்படுகின்றன. 4 வழித்தடங்களிலும் குறைந்த அளவிலான சேவை இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போது முன்களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய துறை ஊழியர்கள் செல்வதற்காக சேவை குறைக்கப்பட்டுள்ளது. விரைவு ரெயில்கள் மட்டும் முழு அளவில் வழக்கம்போல் இயக்கப்படுகிறது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பயணிகள் ரெயில் நிலையங்களில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

முழு ஊரடங்கான இன்று அவசிய தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றினால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட உள்ளனர். சென்னையில் 16 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர்.