தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு...எதற்கெல்லாம் அனுமதி .!

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தபட உள்ள நிலையில் எதற்கெல்லாம் அனுமதி, எதற்கெல்லாம் அனுமதி இல்லை என்பதை சிறிய பட்டியலாய் காணலாம்.

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு...எதற்கெல்லாம் அனுமதி .!

அத்தியாவசியமான மருத்துவ பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ஏ.டி.எம். மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து, பெட்ரோல்-டீசல் பங்குகள் ஆகிவையை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்களும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படலாம். இதர மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புறநகர் ரயில்கள் குறைவான எண்ணிக்கையில் இயக்கபட உள்ளது.

உணவகங்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரவு நேரம் தொலைதூர ஊர்களுக்கு பயணிப்பதற்கு விமானம், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு செல்வதற்கு சொந்த அல்லது வாடகை கார்களை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்படும். 

அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் செயல்படாது என்றும் இறைச்சி கடைகள் மூடப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது 

முழு ஊரடங்கான நாளை திருமண விழாவிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமணம் சார்ந்த நிகழ்ச்சியில் அதிகபட்சம் 100 நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும், திருமண அழைப்பிதழை காண்பித்து பயணங்களை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.