நம்பி வந்த நண்பர்கள்...! மாத்தி சொல்லி, மாட்டி விட்ட கூகுள் மேப்....!

நம்பி வந்த நண்பர்கள்...!    மாத்தி சொல்லி, மாட்டி விட்ட கூகுள் மேப்....!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள  தொடுபுழா அருகே மலையிஞ்சி பகுதியில் வனத்தினுள் உள்ள கிழார்குன்று நீர்வீழ்ச்சியை காண கூகுள் மேப் உதவியுடன் சென்ற சுற்றுலா பயணிகள் வழி தப்பினர். 

கேரளா, மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள போர்டு கொச்சி பகுதியை சேர்ந்த 8 நண்பர்கள் ஏதாவது நீர்விழ்ச்சி பகுதிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அப்போது அவர்கள் நீண்ட நெடிய கலந்துரையாடலுக்கு பின்னர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள  தொடுபுழா அருகே மலையிஞ்சி பகுதியில் வனத்தினுள் உள்ள கிழார் குன்று நீர்வீழ்ச்சிக்கு சொல்வது என முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மலையிஞ்சி பகுதி வரை வாகனத்தில் அனைவரும் சென்றனர். இதன் பின்னர் வனப்பகுதியில் நடந்து செல்ல வேண்டும் என்பதால் வாகனத்தில் இருந்து இறங்கி அவர்கள் கூகுள் மேப் உதவியுடன் நீர்வீழ்ச்சியை சென்று அடையலாம் என எண்ணிய அவர்கள் கூகுள் மேப் உதவியே நாடினர். 

Las 11 características de Google Maps que todo el mundo debe conocer |  Computer Hoy

இவ்வாறிருக்க, கூகுள் மேப் உதவியுடன் வனப்பகுதியில் சென்ற அவர்கள் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை என கூகுள் மேப் காட்டிய பாதையில் இவர்கள் வனப்பகுதியில் சென்ற நிலையில் அப்போதுதான் அவர்களுக்கு தெரிந்தது நீர்வீழ்ச்சி எதிர் புறம் உள்ளது என்றும் தாங்கள் கூகுள் மேப்பை நம்பி வேறு ஒரு பகுதியில் இருப்பதை உணர்ந்தனர். அப்போது தாங்கள் இருக்கும் பகுதி அடர்ந்த வனப்பகுதி என்றும் யானைகள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் அருகில் யானையின் பிளிறல் சத்தம் கேட்டுக் கொண்டு இருந்த நிலையில்  நண்பர்கள் அனைவரும் அதிர்ந்து போனார்கள். 

இதையும் படிக்க     } கருணாநிதியை போல் ஸ்டாலினையும் நாடாள அழைப்பார்கள் - ஆசையை உருக்கத்துடன் பகிர்ந்த துரைமுருகன் !

இதனால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஆங்காங்கே அனைவரும் ஓடி ஒளிந்த நிலையில் அப்போது ஜிஜு ஜேம்ஸ் என்பவர் அங்கிருந்த பாறையில் நின்றபோது எதிர்பாராத விதமாக 30 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் அவரது கை மற்றும் கால் பலத்த காயமடைந்த நிலையில் என்ன செய்வது என தெரியாமல் தவித்த அவரின் நண்பர்கள் உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இதுகுறித்து தகவல் அளித்தனர்.

Google Maps knows everywhere you go. Here's how to stop it

இதனை அடுத்து கரிமண்ணூர் பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் உதவியுடன் பாறையில் தவறி விழுந்த ஜீஜூ ஜேம்ஸை நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர் மீட்டு அவரை முண்டக்கயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சரியாக வழிகாட்டும் என கூகுள் மேப்பை நம்பி ஏமாற்றமடைந்த நண்பர்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர். 

இதையும் படிக்க     } வெப்ப சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு...இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு...!