காணாமல் போன தம்பி... மனநலம் குன்றியவருக்கு மறுவாழ்வு அளித்த அறக்கட்டளை

சென்னை பெருநகர காவல் துறையும், காக்கும் கரங்கள் அறக்கட்டளையும் இணைந்து 23 வயது மதிக்கத்தக்க மனநலம் குன்றிய இளைஞனை குணப்படுத்தி மீண்டும்  குடும்பத்தாருடன் சேர்த்து வைத்து மக்களிடையே சிறந்த வரவேற்பு பெற்றுள்ளது

காணாமல் போன தம்பி... மனநலம் குன்றியவருக்கு மறுவாழ்வு அளித்த அறக்கட்டளை

சென்னை ராயப்பேட்டை பகுதியில் கடந்த மாதம் உடல்நலிவுற்று மனநிலைப் பிறழ்வுடன்  கண்டுபிடிக்கப்பட்ட 23 வயதுடைய இளைஞனை காக்கும் கரங்கள் கை கொடுத்து சென்னை பெருநகர காவல் துறைக்கு தகவல் கொடுத்து உள்ளது.

மனநலம் குன்றிய இளைஞன் காக்கும் கரங்கள் உதவியாளர் கண்ணில் தென்பட்ட போது இரண்டு கால்களிலும் அடிப்பட்ட நிலையில் தான் யாரென்று சுயநினைவு இல்லாத நிலையில் அவனை காக்கும் கரங்கள் அறக்கட்டளைக்கு அழைத்துச் சென்று அங்கு இருக்கக்கூடிய செவிலியர்களும் மருத்துவர்களும் உரிய சிகிச்சை அளித்து அதன் அடிப்படையில் அடுத்த 3 நாட்களுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறி வர தான் யார் என்பது பற்றியும் தன்னுடைய முகவரியையும் கொடுத்து தன் குடும்பத்தாரிடம் தன்னை சேர்த்து வைக்குமாறும் காவல்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

விசாரணையில் 23 வயது மதிக்கத்தக்க இளைஞன் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாபர் அலி என்றும் கடந்த மாதம் 12ஆம் தேதி நாகர் கோவிலில் உள்ள ஒரு கடையில் வேலை பார்ப்பதற்காக தமிழகம் வந்த அடைந்ததாகவும் அங்கிருந்து சென்னைக்கு எப்படி வந்தேன் என்று தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

அவரிடமிருந்து அவரது குடும்பத்தின் முழு தகவல்களை பெற்ற சென்னை பெருநகர காவல் துறையினரும் காக்கும் கரங்கள் இணைந்து குடும்பத்தினரை தகவல் தெரிவித்து தமிழகம் அழைத்து வரப்பட்டு இன்று அவரது குடும்பத்தினருடன் இணைத்து வைக்கும் நிகழ்வு காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.  

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கள் திவால்,
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜாபர் அலியை  அன்பில் பாதை, கருணை உள்ளங்கள் போன்ற  அமைப்பு மூலம் இவரை கண்டறிந்து பாதுகாத்து வந்தார்கள். இன்று அவருடைய அண்ணனிடம் ஒப்படைக்கபட்டுவிட்டார் என்று தெரிவித்தார்.

கடந்த ஒரு மாதமாக தன்னோடு பணிக்கு வந்த தன்  தம்பியை தொலைத்து தனியாக  நின்ற எனக்கு, என் தாயின் தொடர் பிரார்த்தனையாலும், சென்னை காவல்துறை மற்றும் காக்கும் கரங்கள் அறக்கட்டளையின் முயற்சியினாலும் எனது தம்பி எனக்கு கிடைத்து இருக்கிறான். தமிழக காவல் துறையும், காக்கும் கரங்கள் அறக்கட்டளைக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜாபர் அலியின் அண்ணன் இஸ்மாயில் அலி.

மதிக்கத்தக்க மனநலம் குன்றிய இளைஞனை குணப்படுத்தி மீண்டும் குடும்பத்தாருடன் சேர்த்து வைத்த சென்னை பெருநகர காவல் துறைக்கும், காக்கும் கரங்கள் அறக்கட்டளைக்கும் பொதுமக்கள் பாராட்டுதல்களை தெரிவித்து வருகிறார்கள்.