முன்னாள் தலைமை செயலாளர் பி.சபாநாயகம் காலமானார்...!

முன்னாள் தலைமை செயலாளர் பி.சபாநாயகம் காலமானார்...!

தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் பி.சபாநாயகம் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.


ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளருமான பி.சபாநாயகம் தனது 101 வது வயதில் உடல் நிலை குறைவு காரணமாக உயிரிழந்தார். 

1945 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக (ஐஏஎஸ்) பணியில் இணைந்த பி.சபாநாயகம், ஓய்வுபெற்ற பின்னர், தமிழக அரசின் தலைமை செயலாளராக 1971 ஏப்ரல் 7 ஆம் தேதியன்று பொறுப்பேற்றார். இதன்மூலம் தமிழக அரசின் 18 - வது தலைமை செயலாளர் ஆனார். 1971 - 1976 ஆண்டு வரை பதவி வகித்தவர் 1976 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி தலைமை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். 

இதையும் படிக்க : பசுமை மயானங்கள் அமைக்க உத்தரவு! அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் கடிதம்!!

தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி தனது 100-வது பிறந்த நாளை கொண்டாடிய முன்னாள் தலைமை செயலாளர் பி.சபாநாயகத்தை முதலமைச்சர் வாழ்த்தி பேசினார். பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், அரசு அதிகாரிகளுக்கு பி.சபாநாயகம் ஐஏஎஸ் கலங்கரை விளக்கமாக விளங்குகிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். 

இப்படி பல்வேறு முக்கிய பொறுப்புகளில் சிறப்பாக பதவி வகித்து வந்தவரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பாராட்டு பெற்றவருமான பி.சபாநாயகம், வயது மூப்பு காரணமாக இன்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.