யானை இறப்பை தடுக்க மின்சாரத் துறையும் வனத்துறையும் கூட்டு நடவடிக்கை...! வனத்துறை அமைச்சர்...!!

யானை இறப்பை தடுக்க மின்சாரத் துறையும் வனத்துறையும் கூட்டு நடவடிக்கை...! வனத்துறை அமைச்சர்...!!

மின்சாரம் தாக்கி யானைகள் இறக்கும் நிகழ்வுகளைத் தடுக்க மின்சாரத் துறையும் வனத்துறையும் இணைந்து கூட்டு களத் தணிக்கை மேற்கொள்ளப்படும் என்று வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்  தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வனத்துறை மீதான  மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அமைச்சர் மதிவேந்தன், யானைகளின் வலசைப் பாதைகளில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள் மற்றும் தடைகளால் யானைகள் தடம் மாறி விவசாய நிலங்களுக்குள் வருவதாகவும் அவ்வாறு வெளியே வரும் போது மின்சாரம் தாக்கி சில யானைகள் உயிரிழந்ததாகவும் கூறினார். இவ்வாறான இறப்பை தடுக்க மின்சாரத்துறையுடன் இணைந்து கூட்டு களத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு  வருவதாக கூறினார்.  

மேலும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் யானை வருகையை அறிவிக்கும் எச்சரிக்கை அமைப்பு, ரேடியோ காலரிங் பொருத்துதல், மின்னோட்டத்தை தடுக்க அபாய ஒலி அமைப்பு போன்ற திட்டங்கள் யானைகளின் பாதுகாப்பிற்காக செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

இறுதியாக, இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் யானைகள் இறப்பு தணிக்கை கட்டமைப்பு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக கூறினார்.