சென்னையைக் கொண்டாடும் வெளிநாட்டு செஸ் வீரர்கள்..!

சென்னையைக் கொண்டாடும் வெளிநாட்டு செஸ் வீரர்கள்..!

சென்னை நகரமே செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், பல வெளிநாட்டு வீரர்கள் விழா ஏற்பாடுகளைக் கண்டு வியந்து, பாராட்டிய வண்ணம் உள்ளனர். 

செஸ் ஒலிம்பியாட் போட்டி:

ரஷ்யாவில் நடக்க வேண்டிய செஸ் ஒலிம்பியாட் போட்டி, அங்கு நிலவும் போட்டி காரணமாக சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியை துவங்கி வைப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சென்னை வருகை தரவுள்ளார். தமிழ்நாட்டில் முதன் முறையாக நடைபெறவுள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஒட்டி, நேப்பியர் பாலம் செஸ் போன்று வடிவமைக்கப்பட்டதுடன், நகர் முழுவதும் தம்பி சிலைகள் எழுப்பப்பட்டுள்ளன. இதனிடையே, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வருகை தந்துள்ள சர்வதேச செஸ் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு, அவர்கள் மாமல்லபுரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அந்த வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் விழா ஏற்பாடுகளைக் கண்டு வியந்து, தங்களது ட்விட்டர் பக்கங்களில் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

வீரர்களின் ட்வீட்: 

1. டேவிட் லால்டா:

சர்வதேச செஸ் போட்டிகளை நடத்துபவரும், பிரபல செஸ் விமர்சகருமான டேவிட் லால்டா, சென்னையின் உபசரிப்பால் வியந்து போயுள்ளதாகவும், நான் சுற்றீய 61 நாடுகளில் இனி இந்தியா தான் தனது விருப்பமான நாடு எனவும் தெரிவித்துள்ளார். மேலும், பல நாடுகள் சென்று அங்குள்ள உபசரிப்புகளை பெற்றுள்ளேன் அது என்னுடைய பாக்கையம். ஆனால் வேறு எங்கும் இல்லாத வகையில், இங்கு இருக்கும் மக்கள் மனதை திறந்து அன்பு செலுத்துகின்றனர்.

2. ஆன்ரி வோலோகிதீன்:

உக்ரைன் கிராண்ட்மாஸ்டரான ஆன்ரி வோலோகிதீன், நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்களின் முயற்சி வியப்பளிப்பதாகவும், செஸ் தம்பி எல்லா இடங்களிலும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

3. லக்சம்பர்க் நாட்டின் கிராண்ட்மாஸ்டர், இந்திய உணவு சிறப்பாக இருப்பதாகவும், இந்தியாவைப் பற்றி அறிந்துகொள்ள ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

4. மைக் க்ளைன்:

அமெரிக்க கிராண்ட் மாஸ்டரும், பத்திரிகையாளருமான மைக் க்ளைன், இட்லி மற்றும் தோசை புகைப்படத்தை பதிவிட்டு, இரண்டில் எது சிறந்தது என்ற போட்டி இப்போதே தொடங்கி விட்டதாக தெரிவித்துள்ளார். 

இதேபோல், தம்பி சிலைகளின் முன்பு நின்று புகைப்படங்கள் எடுத்தும், தமிழ் பாரம்பரிய உடைகளை அணிந்து, தென்னிந்திய உணவுகளை ரசித்து உண்பது போலவும், பல வெளிநாட்டு வீரர்கள் உற்சாகத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.