கவுன்சிலர் பதவிக்கு முதன்முறையாக போட்டியிடும் திருநங்கை!! வெற்றி பெறுவாரா...? எதிர்பார்ப்பில் கிராம மக்கள்!!

தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு முதல் முறையாக, திருநங்கை போட்டியிடுகிறார். 

கவுன்சிலர் பதவிக்கு முதன்முறையாக போட்டியிடும் திருநங்கை!! வெற்றி பெறுவாரா...? எதிர்பார்ப்பில்  கிராம மக்கள்!!

தமிழகத்தில், நகர்புற உள்ளாட்சித் தேர்தல், பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல்  தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில்  கவுன்சிலர் பதவிக்கு மனு தாக்கல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், 50-வது வார்டில், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட திருநங்கை ஆர்த்தி விருப்ப மனு பெற்றுள்ளார்.

தமிழகத்தில் 10 ஆண்டுகள் கழித்து நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் முதன்முறையாக உள்ளாட்சி பதவிக்கு திருநங்கை ஒருவர் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளது, தூத்துக்குடியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால், முழு நேரமாக மக்கள் பணியாற்றுவேன் என ஆர்த்தி தெரிவித்தார்.