தொடர்மழை- திற்பரப்பு அருவியில் தடுப்பு வேலியை தாண்டி ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்....

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் தடுப்பு வேலியை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

தொடர்மழை- திற்பரப்பு அருவியில் தடுப்பு வேலியை தாண்டி ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்....

 கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் 48 அடி மொத்த கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் அபாய கட்டத்தை எட்டியதை தொடர்ந்து அணையில் இருந்து மூவாயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுறண்டு ஓடுகிறது. இதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளிலும் மழை கொட்டி வருகிறது. இதனால் முக்கிய நீர்பிடிப்பு பணிகளான பேச்சிபாறை , பெருஞ்சாணி , சிற்றார் அணைகள் கிடுகிடுவென நிரம்பி வருகிறது.

திற்பரப்பு அருவியில் வெள்ளம் தடுப்பு வேலியை தாண்டி ஆர்ப்பரித்து கொட்டுகிறது இதனால் நீச்சல்குளம், கல் மண்டபம் நீரில் மூழ்கி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.