வெள்ளத்தில் முழ்கிய தரைப்பாலம்...ஆபத்தை உணராமல் குளித்து மகிழும் சிறுவர்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கௌன்டண்யா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியது

வெள்ளத்தில் முழ்கிய தரைப்பாலம்...ஆபத்தை உணராமல் குளித்து மகிழும் சிறுவர்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை 11.50 மீட்டர் உயரமும் 260 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டது. இந்த அணை தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியது.

அதனைதொடர்ந்து அணையில் இருந்து  உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து தமிழக ஆந்திர எல்லையோரம் பெய்த கனமழை காரணமாக  மோர்தானா அணையில் இருந்து தற்போது 989 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. வெளியேற்ற உபரிநீர் கெளவுண்டயா நதி வழியாக சென்றதால், அங்கு கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலம் மூழ்கியது.

தரை பாலத்தின் மேல் தற்போது தண்ணீர் செல்கிறது. இதற்கிடையில் ஆபத்தை உணராமல் பாலத்தில் அபாயகரமான வகையில் வாகன ஓட்டிகள் தரை பாலத்தின் மீது பயணம் செய்கின்றனர். அதுமட்டுமல்லாது அங்குள்ள சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்கி குளித்து வருகின்றனர்.

பாதுகாப்பு கருதி மாவட்ட ஆட்சியர் நீர்நிலைகளில் குளிக்க தடை விதித்து உத்திரவிட்ட நிலையில் இளைஞர்கள், சிறுவர்கள் குளித்து வருவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.