விளை நிலங்களுக்குள் புகுந்த வெள்ளம்..! விவசாயிகள் வேதனை..!

விளை நிலங்களுக்குள் புகுந்த வெள்ளம்..! விவசாயிகள் வேதனை..!

கன்னியாகுமரி மாவட்டம் வள்ளியாற்றில் உடைப்பு ஏற்பட்டதால் வாழை மற்றும் மரவள்ளி பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. 

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியில் பெய்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து, வள்ளியாற்றில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், சுமார் 150-ஏக்கர் பரப்பிலான வாழை மரவள்ளி பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து அவ்வப்போது பெய்து வரும் கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருவதோடு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

நேற்று மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியில் பெய்த கனமழையால் புத்தனாறு கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் விளை நிலங்களுக்குள் புகுந்தது. நேற்றிரவு பத்மநாபபுரம் வள்ளியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் அருகில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்தது

இதனால் சுமர் 150-ஏக்கர் பரப்பளவு கொண்ட வாழை, மரவள்ளி கிழங்கு பயிர்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில் பெரும் பாதிப்பிற்கு உள்ளானதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதையும் படிக்க  |  மின்சாரம் தாக்கி 6 கறவை மாடுகள் உயிரிழப்பு!