ஆசிரியர்களுக்கு 5 நாள் கணினி பயிற்சி... அரக்கோணத்தில் தொடங்கியது...

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், ராாணிப்பேட்டை கல்வி மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிப்புரியும் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் அடிப்படை கணினி பயிற்சி இன்று தொடங்கியது.

ஆசிரியர்களுக்கு 5 நாள் கணினி பயிற்சி... அரக்கோணத்தில் தொடங்கியது...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், ராணிப்பேட்டை என இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில்  பணிப்புரியும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு கல்வி துறை அடிப்படை கணினி பயிற்சி வழங்க உத்தரவிட்டது.

இதனையடுத்து ராணிப்பேட்டை, அரக்கோணம் கல்வி மாவட்த்தில் முதற்கட்டமாக தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிப்புரியும் 1490 ஆசிரிய, ஆசிரியைகளுக்கு 103 அரசு மேல்நிலை பள்ளிகளில் அமைக்கப்பட்ட மையங்களில் இன்று காலை முதல் பயிற்சி துவங்கியது. இதில் ஆசிரிய, ஆசிரியைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு கணினியில் அடிப்படை பயிற்சியான கைபேசி பயன்பாடு, கணினி சாதனங்கள் அறிதல், கணினி சாதனங்களை பயன்படுத்துதல், கணினி சார்ந்த பிற சாதனங்கள், கணினி சாதனங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களுக்கு தீர்வு காணுதல், இணையத்தை பயன்படுத்துதல் பற்றி தெரிந்து கொள்ள உள்ளனர்கள்.

இதன் மூலம் ஆசிரியர், மாணவர்கள் வருகைபதிவை கல்வி துறை அதிகாரிகளுக்கு தெரியபடுத்தவும், ஆன் லைன் கல்வி கற்பித்தல், வினாத்தாள் தயாரித்தல், பெற்றோர்களுக்கு மாணவர்களை பற்றிய தகவல்கள் தெரிவித்தல்  உள்ளிட்ட கல்வி சார்ந்த பணிகளை எளிதில் கையாள இந்த அடிப்படை கணினி பயிற்சி பயன்படும் என்பதால் தமிழக கல்வி துறை இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

அரக்கோணம் கல்வி மாவட்டத்தில் நடைபெற்று வரும் அடிப்படை கணினி பயிற்சியினை மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் பார்வையிட்டார். அரக்கோணம், நெமிலி, தக்கோலம், காவேரிப்பாக்கம் உள்ளிட்ட வட்டாரங்களில் நடைபெறும் பயிற்சிகளை வட்டார கல்வி அலுவலர்கள் பார்வையிட்டனர்கள்.