மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிகிறது.. கடலுக்கு செல்ல ஆயுத்தமாகி வரும் மீனவர்கள்!!

மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் இன்று மீன் பிடிக்க கடலுக்கு செல்ல ஆயத்த மாகி வரும் நிலையில் தடைக்கால நிவாரணத்தொகை இதுவரை கிடைக்கவில்லை என தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிகிறது.. கடலுக்கு செல்ல ஆயுத்தமாகி வரும் மீனவர்கள்!!

மீன்பிடித் தடைக்காலம் இன்று முடிவடைவதை தொடர்ந்து சுமார் 2 மாதங்களுக்கு பிறகு நாளை புதன்கிழமை முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.

விசைப்படகுகளில் டீசல் நிரப்புதல் போன்ற பணிகளில் மீனவர்கள்  ஈடுபட்டனர். படகுகளில் ஐஸ் கட்டிகளை ஏற்றுதல், வலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றுதல் போன்ற பணிகளை இன்று மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து நாளை அதிகாலை விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். தடைக்காலம் முடிந்து கடலுக்கு செல்வதால் மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மீன்வர்கள் தயாராகி வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய, மீனவர் சங்க தலைவர் தர்ம பிச்சை, மீன்பிடி தடை காலத்தில் தங்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணத்தொகை  இதுவரை கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினார். தடைக்கால நிவாரண தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.