அமலுக்கு வந்த மீன்பிடித் தடைக்காலம்...!!

அமலுக்கு வந்த மீன்பிடித் தடைக்காலம்...!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடப்பாண்டிற்கான 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி வரை மீனவ கிராமங்களில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கான தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.  தமிழ்நாட்டின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் அறிவித்துள்ள நிலையில் இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம்.  அதன்படி தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது

இந்நிலையில் சென்னை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 18 தமிழ்நாடு கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:    சென்னையில் தீத்தொண்டு வாரம் விழிப்புணர்வு மாரத்தான்...!!