மீனவர்களுக்கு விரைவில் ட்ரான்ஸ்பான்டர் கருவிகள் வழங்கப்படும்  

ரூ.15 கோடி மதிப்பீட்டில் 5000 ட்ரான்ஸ்பான்டர் கருவிகள் விரைவில் மீனவர்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளதாக மீன்வளத்துறை செயலாளர் ஜவகர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த அவர்,  "தமிழக மீனவர்கள் கடல் எல்லையை தாண்டுவதை தடுக்கவும், மீன்பிடி படகுகள் செல்வதை கண்காணிக்கவும் இஸ்ரோ நிறுவனம் வடிவமைத்த நவீன டிரான்ஸ்பான்டர் கருவிகளை தமிழக அரசு விரைவில் மீனவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக கூறினார்.

மேலும், மீன்பிடிப்பதற்காக ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்கள் கடல் எல்லையை தாண்டுவதை தடுக்கவும், புயல்,மழைக்காலங்களில் சிக்கியுள்ள படகுகளை கண்டறியவும் உதவும் புதிய நவீன ட்ரான்ஸ்பான்டர் கருவிகளை இஸ்ரோ நிறுவனத்திடமிருந்து ரூ.15 கோடி மதிப்பிலான 5,000 கருவிகளை தமிழக அரசு கொள்முதல் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்த கருவிகள் அக்டோபர் மாதத்தில் மீனவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,இதன் மூலம் மீனவர்கள் பயணடைவதோடு, அவர்கள் ஆபத்தில்லாமல் மீன்பிடிப்பதை உறுதி செய்ய முடியும் எனவும் அவர் கூறினார்