அரசு வரைபடத்தில் விடுபட்ட மீனவ கிராமத்தின் பல்வேறு பகுதிகள்... மீனவர்கள் போராட்டம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு வெளியிட்ட கடற்கரை மேலாண்மை மண்டல வரைபடத்தில் புன்னைக்காயல் மீனவ கிராமத்தின் பல்வேறு பகுதிகள் விடுபட்டிருப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

புன்னகாயல் ஊர் நிர்வாக கமிட்டி வழிகாட்டுதலில் கடற்கரை மேலாண்மை மண்டல வரைபடத்தில் புன்னைக்காயல் மீனவ கிராமத்தின் பல்வேறு பகுதிகள் அரசின் வரையறுக்கப்பட்ட வரைபடத்தில்  விடுபட்டுள்ளதை கண்டித்து அக்.30ம் தேதி அப்பகுதி பொதுமக்கள் ஊர் கமிட்டி தலைவர் எடிசன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதைத்தொடர்ந்து கிராம மக்கள் தயாரித்த வரைபடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,  ஊர் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து மீன்துறை இணை இயக்குநர் மற்றும் சுற்றுச் சூழல் & மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இயக்குனர் ஆகியோரிடமும் அந்த வரைபடத்தை சமர்ப்பித்துள்ளனர்.