கோவில் திருவிழாவில் வெடித்த பட்டாசு: தீப்பொறி பட்டு கொளுந்துவிட்ட எரிந்த தீ விபத்து…  

கோவில் திருவிழாவில் வெடித்த பட்டாசு தீப்பொறி பட்டு 5 மணி நேரமாக எரிந்து வரும் பேப்பர் குடோன்கள் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

சென்னை திருவொற்றியூர் அடுத்த சத்தியமூர்த்தி நகர் பக்கிங்காம் கால்வாய் அருகே உள்ள இடத்தில் குடோன்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை அம்மன் கோவில்களில் திருவிழா என்பதால் பட்டாசு வெடித்து கொண்டாட்டங்கள் அரங்கேறி வந்தபோது பட்டாசின் தீப்பொறி பட்டு குடோன் ஒன்று தீப்பற்றி எரிய தொடங்கியது.

குடோன் முழுவதும் அட்டை மற்றும் பேப்பர்கள் முழுவதும் நிறைந்து இருந்ததால் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து எண்ணூர்  மணலி திருவொற்றியூர் மாதவரம் தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முழுவதும் பேப்பர் மற்றும் அட்டை பொருள்கள் என்பதால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் பயங்கர வீசி எரிந்து வருகிறது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து சாத்தாங்காடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.