மூக்கின் மூலமாக டியூப்களில் காற்றை நிரப்பி கராத்தே பயிற்சியாளர் 98-வது சாதனை.. 9.45 நிமிடங்களில் 3 டியூப்கள்!!

இளம்பிள்ளை அருகே மூக்கின் துவாரம் வழியாக லாரி சக்கர டியூபுகளில் காற்றை நிரப்பி கராத்தே பயிற்சியாளர் ஒருவர் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

மூக்கின் மூலமாக டியூப்களில் காற்றை நிரப்பி  கராத்தே பயிற்சியாளர்  98-வது சாதனை.. 9.45 நிமிடங்களில் 3 டியூப்கள்!!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை, அத்தனூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். கராத்தே பயிற்சியாளரான இவர் கின்னஸ் சாதனைகள் உள்பட 97 வகையான சாதனை நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இவர் தனது 98-வது சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

யோகாசன பயிற்சியில் மிகவும் முக்கியமான "பிராணாயாமம்" எனப்படும் மூச்சு பயிற்சி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மூக்கின் துவாரம் வழியாக லாரி சக்கரங்களில் பயன்படுத்தப்படும் 3 டியூபுகளில் காற்றை நிரப்பி  சாதனை படைத்துள்ளார்.

9 நிமிடம் 45 வினாடிகளில் நிகழ்த்தப்பட்ட இந்த சாதனை காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இவரின் சாதனையை வோர்ல்டு டேலன்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனம் அங்கீகரித்து அதற்கான சான்றிதழை வழங்கியது. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் அனைவரும் தவறாமல் மூச்சிப் பயிற்சி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.