அவை உரிமை மீறல் கொண்டு வந்த டி.ஆர்.பி.ராஜா...குழுவிற்கு உத்தரவிட்ட அப்பாவு...!

அவை உரிமை மீறல் கொண்டு வந்த டி.ஆர்.பி.ராஜா...குழுவிற்கு உத்தரவிட்ட அப்பாவு...!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது, வீடியோ பதிவு செய்தவர் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அவை உரிமை மீறல் குழுவிற்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

அவை உரிமை மீறல் :

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து 3 ஆம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியதையடுத்து, கேள்வி நேரம் ஆரம்பமானது. அப்போது, முதல் நாள் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை வாசித்துக்கொண்டிருக்கும் போது,  ஆளுநரின் முக்கிய விருந்தினர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த ஒருவர், பேரவை நடவடிக்கைகளை தனது கைபேசி மூலம் பதிவு செய்ததாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் டிஆர்பி ராஜா அவை உரிமை மீறல் கொண்டு வந்தார்.

இதையும் படிக்க: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சிறப்பு தீர்மானத்திற்கு...முதலமைச்சரின் பதில் என்ன...?

கைப்பேசிகளை அனுமதிக்கக்கூடாது:

சட்டப்பேரவையை பொறுத்தவரையில், அனுமதிக்கப்பட்ட புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் மட்டுமே பேரவை நிகழ்வுகளை பதிவு செய்ய முடியும் என குறிப்பிட்ட அவர், பேரவை உறுப்பினர்களுக்கே அந்த அதிகாரம் இல்லாத போது, அவைக்குள் அந்நியர்கள் கைபேசியை எடுத்துவர அனுமதிக்கப்படக் கூடாது எனவும் கூறினார்.

அவை உரிமை மீறல் குழுவிற்கு உத்தரவு:

இதற்கு பதிலளித்துப் பேசிய சபாநாயகர் அப்பாவு, இந்த பிரச்சனையில் அவை உரிமை மீறல் இருப்பதாகக் கருதுவதால், ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அவை உரிமை மீறல் குழுவிற்கு உத்தரவிட்டார்.