வேகமாக பரவி வரும் ஒமைக்ரான்...அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுங்கள்..ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்...!!.

ஓமைக்ரான் வைரஸ் பரவி வரும் சூழ்நிலையில், அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.

வேகமாக பரவி வரும் ஒமைக்ரான்...அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுங்கள்..ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்...!!.

அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியின் 77 வது ஆண்டு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதனைதொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, விடுதலை பெற்ற நாளில் இருந்து நாடு வளர்ச்சி என்ற ஒற்றை இலக்கை நோக்கி நகர்ந்து வருகிறது. எந்த துறையில் இருந்தாலும், மக்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்ற முடியும் என்றார்.

கடந்த 7 ஆண்டுகளாக பிரதமர் மோடி, வளர்ச்சி என்ற ஒற்றை இலக்கை நோக்கி செயல்பட்டு வருவதாகவும், மக்கள் திறந்தவெளியில் மலம் கழித்து வந்தநிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் இலவச கழிப்பிடங்களை பொது இடங்களிலும் மற்றும் பள்ளி கல்லூரிகளிலும் கட்டி கொடுத்து நாட்டின் பொது சுகாதாரம், கலாச்சாரத்தை பாதுகாத்துள்ளார் எனக் கூறினார்.

படித்து முடிக்கும் முன்னாள் மாணவர்கள் பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்ல, வாழ்வின் பல ஏற்றங்களையும் இறக்கங்களை பார்த்தவர்கள், அனுபவம் உள்ளவர்கள், எனவே வளரும் இளம் பொறியிலாளர்களுடன் இணைந்து, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தொழில் தொடங்குவது குறித்து செயல்பட்டால் தனிமனித வளர்ச்சி மட்டுமின்றி நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காக இருக்கும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தற்போது கொரோனா காலம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், ஒமைக்கிரான் என்ற புதிய வகை தொற்று நாடு முழுவதும் பரவி வருகிற சூழ்நிலையில் அனைத்து வகையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளையும் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.