அறுவடை செய்யப்பட்ட நெல்லுடன் இரவு - பகலாக காத்திருக்கும் விவசாயிகள்

தஞ்சையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லுடன் இரவு - பகலாக 20 நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள்  வேதனை தெரிவித்துள்ளனர்.

அறுவடை செய்யப்பட்ட நெல்லுடன்  இரவு - பகலாக காத்திருக்கும் விவசாயிகள்

தஞ்சையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லுடன் இரவு - பகலாக 20 நாட்களாக காத்திருக்கும் விவசாயிகள்  வேதனை தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அன்னப்பன்பேட்டை பகுதியில் அறுவடை செய்யப்பட்ட நெல்லுடன் 20 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் சாலையோரங்களில், காத்து கிடக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் இரவு நேரங்களில், மழை விட்டுவிட்டு பெய்வதால், நெல் மணிகள் அனைத்தும் முளைக்கத் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

நெல்மணிகள் மழையில் நனைவதால் முளைத்து வீணாக கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறிய விவசாயிகள், நெல்லின் ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் செய்வதை தாமதம் செய்வதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

 எனவே கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து, ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும்  நெல்லின் ஈரப்பதத்தை 20 சதவீதம் வரை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் எனவும்  விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.