விவசாயிகள் அச்சப்பட வேண்டாம் ... !அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பேட்டி...!

விவசாயிகள் அச்சப்பட வேண்டாம் ... !அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பேட்டி...!

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டெல்டா மாவட்டங்களில் புதியதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைய இருப்பது பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டல பகுதிகளில் சுரங்கங்கள் அமைப்பட இருப்பது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், வேளாண் பாதுகாப்பு மண்டத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு அனுமதிக்கமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதனை அடுத்து பேசிய அவர் மத்திய அரசு  இதுவரை நிலக்கரி சுரங்கங்கள் பற்றி அனுமதியோதும் கேட்கவில்லை என்வும், விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய எந்த செயலிலும் தமிழ்நாடு  அரசு ஒருபோதும் ஈடுபடாது எனவும், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உறுதி அளித்தார்.

மேலும் ,நம் முதல்வர் விவசாயிகளுக்கென தனி பட்ஜெட்டை ஒதுக்கி கொடுத்திருக்கிறார் என்றும் ,நிலக்கரி சுரங்கங்கள் அமைந்தால் எற்பட இருக்கும் விளைவுகளை பிரதமரிடம் எடுத்துரைப்பாகவும் , இதற்கான முடிவுகளில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கு முன்பாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள 11 இடங்களை துளையிட்டு நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு தேர்வு செய்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது

இதையும் படிக்க  வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதா? - சீமான்