தரமற்ற நெல் விதையால் நஷ்டமடைந்த விவசாயிகள்... அரிசி உற்பத்தியாகமால் விளைந்து நிற்கும் நெல்மணிகள்...

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதிகளில் தரமற்ற நெல் விதையால், நெல் மணியில் அரிசி இல்லாமல் விளைந்து நிற்பதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தரமற்ற நெல் விதையால் நஷ்டமடைந்த விவசாயிகள்... அரிசி உற்பத்தியாகமால் விளைந்து நிற்கும் நெல்மணிகள்...

சூளகிரி அடுத்த மருதாண்டப்பள்ளி, காளிங்கவரம், சிம்பல்திராடி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமங்களில் பிரதான தொழிலாக விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். கோடைக்காலம், மழைக்காலம், என பருவம், பட்டம் பார்த்து நெல்,ராகி,வேர்க்கடலை ஆகியவை விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த கிராமங்களில் தற்போது நெற்பயிர் பல ரகங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில் நெல்மணிகளில் அரிசி உற்பதியாகமால் விளைந்து நிற்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகள் வழக்கமான நெல் ரகத்தை பெற சூளகிரியில் உள்ள சாய் அக்ரி விவசாய மருந்து கடைக்கு சென்றபோது அதன் உரிமையாளர் புதியவகை நெல் விதையை வழங்கி அதிக மகசூல் விளையும் என வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனை நம்பி பயிரிட்ட விவசாயிகள் விளைச்சல் இல்லாமல் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். தரமற்ற விதை நெல்லை பயிரிட்டதே இந்த அவலநிலைக்கான காரணம் எனவும், வேளாண் துறையினர் ஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சம்பந்தபட்ட  மருந்து கடையில் அதிகாரிகள் ஆய்வு செய்து தரமற்ற விதைகளை விற்கும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.