என். எல். சி விவகாரத்தில் முத்தரப்பு பேச்சு தோல்வி ; போராட்டம் தொடரும் என அறிவிப்பு...!

என். எல். சி விவகாரத்தில்  முத்தரப்பு பேச்சு தோல்வி ; போராட்டம் தொடரும் என அறிவிப்பு...!

கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து போராட்டம் தொடரும் என ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். 

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் ஐம்பதாயிரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி கடந்த 25ஆம் தேதி இரவு முதல் வேலை எடுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி 13வது நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் 

இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமையில்தொழிற்சங்க நிர்வாகிகளிடம் மூத்தரப்பு பேச்சுவார்த்தை துவங்கியது.

இதில் என்எல்சி அதிகாரிகள் கடலூர் எஸ்.பி இராஜாராம் ஆகியோர் பங்கேற்று நடைபெற்ற பேச்சுவார்ததையில் 2 மணி நடைபெற்ற பேச்சுவார்ததையில் உடன்பாட்டு எட்டபடவில்லை என்பாதல் நாளை மீண்டும் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்ததை நடைபெறவுள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜீவா ஒப்பந்த தொழிற்சங்க சிறப்பு தலைவர் சேகர் கூறுகையில்:- 

”மாவட்ட நிர்வாகத்தோடு நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏத்தப்படாததால் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்”,  எனவும், 

நாளைய தினம் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது அங்கு தங்களது கோரிக்கை குறித்து வலியுறுத்த போவதாக அறிவித்தார்.

இதையும் படிக்க   |  மக்களுக்கு பயனளிக்குமா அதானி துறைமுக விரிவாக்கம்...?