புதுச்சேரி: நீதிமன்றத்திற்குள் வருபவர்கள் கட்டாயம் முககவசம் - இன்று முதல் அமல்!!!

புதுச்சேரி:  நீதிமன்றத்திற்குள் வருபவர்கள் கட்டாயம் முககவசம்  - இன்று முதல் அமல்!!!

   புதுச்சேரியில் முககவசம் கட்டாயம்

புதுச்சேரி மாநில தலைமை நீதிமன்றத்திற்குள் வருபவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்தது. நீதிமன்றங்களுக்குள் வந்த வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிபதிகள் முககவசம் வழங்கினார்கள்.

மேலும் படிக்க |தமிழர்கள் அல்லாத ஐபிஎல் அணி... தடை செய்யப்பட வேண்டும் 

புதுச்சேரி -  தொற்று அதிகரிப்பு

புதுச்சேரியில் கடந்த 15 நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இதை கட்டுப்படுத்தும் விதமாக  பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முக கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள ஒருங்கிணைந்த தலைமை நீதிமன்றத்தில் 18 நீதிமன்றங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றார்கள், தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளுக்காக வந்து செல்கின்றார்கள். ஆகவே அரசின் உத்தரவை அமல்படுத்தும் வகையில் இன்று முதல் நீதிமன்றத்திற்கு வரும் அனைவரும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

மேலும் படிக்க |  எதை எதை யாரிடமிருந்து கற்றுக் கொண்டேன் எனக் கூறிய உதயநிதி...!!!

அதன்படி புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற வளாகத்திற்குள்  வரும் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீதிபதிகள் முககவசம் வழங்கி கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினர்கள்.