பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம்..!!

பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம்..!!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றைரை ஆண்டுகளுக்கு பிறகு  தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வல்லவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று அதிகரித்து வருவதாகவும் இதனை கட்டுப்பட்டுத்த பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தற்போது கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு 15% அதிகரித்துள்ளதாகவும், கடற்கரை, திரையரங்கம் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடம் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் இதேபோல் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும்,பள்ளி, கல்லூரிகளில்  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் தேர்வு மையங்கள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 2 தவனை தடுப்பூசி செலுத்துதை உறுதிபடுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார்.