பன்வாரிலால் புரோகித் கூறியதை ஏற்க முடியாது...கே.பி.அன்பழகனின் பதில் என்ன?

பன்வாரிலால் புரோகித் கூறியதை ஏற்க முடியாது...கே.பி.அன்பழகனின் பதில் என்ன?

துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு நடத்திருந்தால்  ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மட்டுமே பொறுப்பு என முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.  

பன்வாரிலால் குற்றச்சாட்டு:

தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகள் 50 கோடி ரூபாய்க்கு  வரை விற்பனை செய்யப்படுவதாக  தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும், தற்போது பஞ்சாப் மாநில ஆளுநருமான பன்வாரிலால் குற்றம் சாட்டினார்.

இதையும் படிக்க: தீபாவளி பண்டிகை: பன்மடங்காக உயர்ந்த விமான கட்டணம்...அதிர்ச்சியில் பயணிகள்!

கே.பி. அன்பழகன் விளக்கம்:

இது குறித்து தர்மபுரியில் விளக்கமளித்த முன்னாள் அமைச்சர் கே. பி.அன்பழகன், துணைவேந்தர் நியமனம் என்பது ஆளுநர் மட்டுமே முடிவு எடுக்க முடியும். இந்த விவகாரத்தில் ஆளுகின்ற முதலமைச்சருக்கும், கல்வித்துறைக்கும் தொடர்பு இல்லை என்றார். ஒரு வேளை பணம் கை மாறியிருந்தால் அப்போதைய ஆளுநரான பன்வாரிலாலுக்கு சென்றிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

பன்வாரிலால் புரோகித் மட்டுமே காரணம்:

எனவே, துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடு நடத்திருந்தால் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மட்டுமே பொறுப்பு என முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.