வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு.. ராட்சத குழாய்களை முறையாக சீரமைக்க வேண்டும் - சமூக ஆர்வலர்கள்

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டி அனல் மின் நிலையத்தில் சாம்பல் கழிவுகள்  குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதாக  அப்பகுதி பொது மக்கள் வேதனை தொிவித்துள்ளனா்.

வெளியேறும் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு.. ராட்சத குழாய்களை  முறையாக சீரமைக்க வேண்டும் - சமூக ஆர்வலர்கள்

அத்திப்பட்டில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் அனைத்தும் 5 பெரிய குழாய்கள் மூலம் குட்டைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அந்த குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.

இந்த சாம்பல் நீரில்  செல்லினியம் என்ற பொருள் கலந்துள்ளதனால்  அவற்றை மீன்கள் சாப்பிட்டால்  மலட்டுத் தன்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

எண்ணூர் கழிமுகம் வரை பாதிப்பை ஏற்படுத்தி வரும் சாம்பல் கழிவுகள் ராட்சத பைப்பை உடனடியாக  சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.