மீன்பிடி தடைக்காலம் அமல்; காசிமேட்டில் குவிந்த மீன் பிரியர்கள்...!

மீன்பிடி தடைக்காலம் அமல்; காசிமேட்டில் குவிந்த மீன் பிரியர்கள்...!

சென்னை காசிமேட்டில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்த நிலையில், மீன் பிரியர்கள் மீன்களை வாங்க குவிந்தனர்.

தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன் பிடி தடைக்காலம் விதிக்கப்படும். அந்தவகையில், நேற்று இந்த தடைக்காலமானது தொடங்கிய நிலையில், ஏற்கனவே கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் இன்று கரைக்கு திரும்பி மீன் விற்னையில் ஈடுபட்டன.

இதையும் படிக்க : தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா...நேற்றைய பாதிப்பு மட்டும் இவ்வளவா?

அதன்படி, வஞ்சிரம் கிலோவுக்கு ஆயிரத்து 300 ரூபாய்க்கும், பாறை மீன் கிலோவுக்கு 500 ரூபாய்க்கும், இறால், நண்டு கிலோவுக்கு 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நள்ளிரவு இரண்டு மணி அளவில் ஏல முறையில் தொடங்கிய இந்த விற்பனையில் மீன் வியாபாரிகளும், பொதுமக்களும் மீன்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.