2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... முதலமைச்சர் ஸ்டாலின்!!

2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... முதலமைச்சர் ஸ்டாலின்!!

ஹூண்டாய் நிறுவனம் மூலம் 15 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 2 லட்சம் பேருக்கு மறைமுகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஒப்பந்தம்:

தமிழ்நாடு அரசு – ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இடையே சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது, 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஹுண்டாய் தொழிற்சாலையை நவீன மயமாக்கல், மின்னேற்று நிலையங்கள், நவீன வகை கார்கள் உருவாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

முதலிடத்தில்:

பின்னர், விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வாகன தயாரிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக பெருமிதம்  தெரிவித்தார். கார் ஏற்றுமதியில் ஹூண்டாய் நிறுவனம் 2-வது இடத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்ட முதலமைச்சர், ஹூண்டாய் நிறுவனம் மூலம் 15 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 2 லட்சம் பேருக்கு மறைமுகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார். 

அதிக முதலீடுகள்:

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவின் செயல்பாட்டிற்கு பாராட்டு தெரிவிதததுடன், புதிய தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ராஜா, அதிக அளவிலான முதலீடுகளை ஈர்ப்பார் என நம்புவதாகவும் தெரிவித்தார். 

இதையும் படிக்க:  நம்பி ஏமாற வேண்டாம்.. சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!!