சாலையை வழிமறித்த யானைகள்... வாகன ஓட்டிகள் அச்சம்...

யானைகள் சாலையை வழிமறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சம்

சாலையை வழிமறித்த யானைகள்... வாகன ஓட்டிகள் அச்சம்...

சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் அருகே குட்டிகளோடு யானைகள் சாலையை வழிமறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.

இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையை கடப்பதும் சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வது வழக்கம். இந்த நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைகள் குட்டிகளோடு சாலையோரம் தீவனங்களை உட்கொண்டு விட்டு சாலையை வழிமறித்து நின்றது.

இதனால் திண்டுக்கல் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள சாலை என்பதால் யானைகள் சாலையோரம் நடமாடும் எனவும், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் யானைகளை தொந்தரவு செய்யும் வகையில் சாலையில் நின்று புகைப்படம் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.