தொடர் மழை எதிரொலி..!  - எள் சாகுபடி பாதிப்பு....!

தொடர் மழை எதிரொலி..!  - எள் சாகுபடி பாதிப்பு....!

திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு பதிலாக செய்த  எள் சாகுபடி  கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக பெய்த மழையின் காரணமாக கடுமையான பாதிப்பு. 
எள் சாகுபடி செய்த சிறு குறு விவசாயிகள் எள் சாகுபடிக்காக செலவழித்த தொகையை  எடுக்க முடியாது என வேதனை ....

தமிழகத்தின் முக்கிய நெல் உற்பத்தி மையமாக விளங்குவது திருவாரூர் மாவட்டம் மேட்டூர் அணை தண்ணீர் சரியான நேரத்தில் திறக்கப்படும் நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் குருவை மற்றும் சம்பா என இரண்டு போகம் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். அதன் பிறகு ஆழ் குழாய் கிணறு வைத்துள்ளவர்கள் கோடை பருவத்தில் நெல் சாகுபடி மேற்கொள்வார்கள். மேலும், ஏனைய சிறு குறு விவசாயிகள் அதிகம்  எள் உளுந்து பயறு பருத்தி கடலை போன்ற பயிர் சாகுபடிகளை மேற்கொள்வார்கள். இந்த கோடை சாகுபடி பயிர்களுக்கு அதிகம் தண்ணீர் தேவைப்படுவதில்லை.

அதிலும் குறிப்பாக,  எள்  சாகுபடிக்கு எள்ளளவு அதாவது மிகக் குறைந்த அளவு தண்ணீர் போதுமானது  எள் சாகுபடி செய்யப்பட்ட நாளிலிருந்து மூன்று முறை அல்லது இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.  ஆகவே  இந்த ஆண்டு சம்பா சாகுபடி நிறைவடைந்த உடன் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 25,000 ஏக்கருக்கு மேலாக எள் சாகுபடி செய்யப்பட்டது.  எள் பயிருக்கு  குறைந்த அளவு தண்ணீர் போதுமானது அதாவது குறிப்பிட்ட கால அளவில்   எள் விதைக்கப்பட்ட நாளிலிருந்து 30 வது நாள் அதன் பிறகு பூ வைக்கக்கூடிய 45 வது நாள் அதன் பிறகு காய் கொண்ட அறுபதாம் நாள் ஆகிய நிலையில் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.  

Expanded Sesame Opportunities in Texas | Texas Row Crops Newsletter

இந்த கோடைகாலத்தில் எள்  பயிர் செய்யப்பட்ட நாளிலிருந்து அவ்வப்போது லேசான கோடைமழை பெய்து விவசாயிகள் எவ்வித பிரச்சனையும் இல்லாமல்  எள் சாகுபடி மேற்கொள்வார்கள். நல்ல விளைச்சலும் தரும். ஆனால் இந்த முறை  எள் பயிர் செய்த சிறு குறு விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளார்கள் தாங்கள் செலவு செய்த தொகையை எடுக்க முடியுமா என வேதனையில் உள்ளார்கள் ஏனென்றால் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக எள் சாகுபடி மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஏனென்றால் எள்ளுக்கு எள்ளளவு தண்ணீர் போதுமானது தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில்  4 நாட்களாக  மழை  பெய்ததால்  எள்  செடிகள் சோர்வடைந்து மகசூல் பெற முடியாத சூழ்நிலையில் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

ஒவ்வொரு விவசாயியும் ஏக்கர் ஒன்றிற்கு எள் சாகுபடிக்காக இரண்டு முறை உழவு எள் விதை , பாத்தி கட்டி வாய்க்கால் இழுத்தல், உரம் ,மருந்து என சுமார் 7000 ரூபாய்க்கு மேலாக செலவு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க    }  இந்துக்கள் பண்டிகைகளுக்கு ஏன் வாழ்த்து சொல்ல மறுக்கிறார்....? முதலமைச்சருக்கு ஆளுநர் தமிழிசை கேள்வி.

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி நீடாமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் எள் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு குறுவிவசாயிகள் தாங்கள் செலவு செய்த தொகையை கூட எடுக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் ஆகவே திருவாரூர் மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் உடனடியாக மாவட்டம் முழுவதும் எள் சாகுபடி பாதிப்பை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

Sesame seeds: Massive crop damage expected - Mundus Agri

மேலும், போதிய விழிப்புணர்வு இல்லாததால் பல சிறு குறு விவசாயிகள் எள் சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்யவில்லை ஆகவே பயிர் காப்பீடு செய்யாத சிறு குறு விவசாயிகளையும் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார்கள்

நிலத்தடி நீரை சேமிப்பதற்காக கோடை பருவ  நேரத்தில் அதிகமாக நீர் தேவைப்படும் நெல் சாகுபடியை மேற்கொள்ளாமல் கோடை பயிரான எள் சாகுபடி மேற்கொண்ட சிறு குறு விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிக்க    }  நாகையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்..! - மீன்வளத்துறை எச்சரிக்கை.