நீட் தேர்வு தொடர்பாக மாறி மாறி வாக்குவாதம் செய்த ஈபிஎஸ் - முதலமைச்சர்...!

நீட் தேர்வு தொடர்பாக மாறி மாறி வாக்குவாதம் செய்த ஈபிஎஸ் - முதலமைச்சர்...!

நீட் தேர்வு தொடர்பாக கேள்வியெழுப்பிய எடப்பாடி பழனிச்சாமிக்கு, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் வரையில் தமிழகத்தில் வராத நீட், ஈபிஎஸ் ஆட்சியில் வந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். 

நீர் தேர்வு தொடர்பாக அதிமுக கேள்வி:

சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் போது நீட் தேர்வு தொடர்பாக  அதிமுக சார்பில் கேபி முனுசாமி குற்றம்சாட்டினார். அதாவது கடந்த 2010ல் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது எனவும், தன்னுடைய ஆட்சியின்போது அதனை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் இல்லை, மாநில அரசிடம் மட்டுமே உள்ளது எனவும் அப்போதைய முதலமைச்சர் கூறினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் நீட் தேர்வை தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்தவர் கலைஞர் என குறிப்பிட்டார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் வரை நீட் தேர்வு வரவில்லை எனவும் ஈபிஎஸ் ஆட்சியிலேயே கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிக்க: அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையில் நடந்தது என்ன? மீண்டும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது ஏன்?

பிள்ளையார் சுழி போட்டதே காங்கிரஸ்: 

தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், குடியரசுத்தலைவர் திருப்பி அனுப்பிய நீட் மசோதா செய்தியை கடைசிவரை அதிமுக சட்டப்பேரவையில் மறைத்ததாக தெரிவித்தார். அப்போது ஆவேசத்துடன் பேசிய ஈபிஎஸ், வேண்டுமென்றே தன்மீது திட்டமிட்டு பழி சுமத்தப்பட்டு வருவதாகக் கூறினார். மேலும், நீட் தேர்விற்கு பிள்ளையார் சுழி போட்டதே காங்கிரஸ் ஆட்சிதான் எனவும் அவர் குறிப்பிட்டார். இதனால் அவையில் சிறிது நேரம் பதற்றம் நீடித்தது. 

இதையடுத்து பேசிய முதலமைச்சர், காங்கிரஸ் நீட் தேர்வைக் கொண்டு வந்தபோதும், திமுக அதனை முழுமையாக எதிர்த்ததாக குறிப்பிட்டார். இப்படியாக இருவரும் மாறி மாறி பதிலளித்துக் கொண்டதால் அவையில் சிறிது நேரம் பதற்றம் நீடித்தது.