அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்...ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்...ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக நாளை சபா நாயகரை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் முடிவு செய்துள்ளனர். 

சட்டப்பேரவை கூட்டத்தொடர்:

தமிழ்நாடு ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடர், வரும் வெள்ளிக்கிழமை 13 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்:

இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓ பன்னீர்செல்வம் மனோஜ் பாண்டியன் வைத்திலிங்கம் மற்றும் ஐயப்பன் ஆகிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை தவிர எஞ்சிய 61 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். 

இதையும் படிக்க: புத்தொழில் செயல்பாட்டின் தலைவர் தமிழ்நாடு...உலகத் தமிழ் புத்தொழில் மாநாட்டில் முதலமைச்சர் உரை!

துணை இருக்கை குறித்து சந்திப்பு:

இந்த கூட்டத்தில் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தபட்டுள்ளதாகவும், ஆளுநர் உரை குறித்து ஊடகங்களில் எப்படி கருத்து தெரிவிக்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையை  திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமாருக்கு ஓதுக்குவது குறித்து நாளை காலை 9.15 மணிக்கு சபாநாயகரை சந்திக்கவும் அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.