”காவிரி குண்டாறு திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது” எடப்பாடி குற்றச்சாட்டு!

”காவிரி குண்டாறு திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது” எடப்பாடி குற்றச்சாட்டு!

அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட காவிரி குண்டாறு திட்டத்தை திமுக அரசு  கிடப்பில் போட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார்.


பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சி சென்ற ஈபிஎஸ்ஸுக்கு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பேரவை மற்றும் மாடுபிடி வீரர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. 

இதையடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்ந்து நடைபெறுவதற்கு எப்போதும் துணை நிற்போம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஆகஸ்ட் 20-ம் தேதி மதுரையில் அதிமுக சார்பில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளதாக கூறினார்.

இதையும் படிக்க : தக்காளி விலையைக் குறைக்க பரிசீலனை - அமைச்சர் பெரியகருப்பன்!

மேலும் மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை சேமிக்கும் வகையில் சிறிய அணை ஒன்று கட்டப்பட வேண்டும் என்றார்.  அதிமுக ஆட்சியில் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை தற்போதைய திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஆட்சியில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகளால் தண்ணீர் வீணாவது தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறினார்.