மருத்துவரின் அலட்சியத்தால்..... நோயாளி மூச்சுத்திணறி உயிரிழப்பு...!

மருத்துவரின் அலட்சியத்தால்..... நோயாளி மூச்சுத்திணறி  உயிரிழப்பு...!

 தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இங்கு அதிநவீன மருத்துவ வசதிகளும் உள்நோயாளிகள் சிகிச்சை பெரும் வகையில் ஆயிரத்திற்கும் மெற்பட்ட படுக்கை வசதிகளுடனும், மகப்பேறு சிகிச்சை பெற தனியாக அதிநவீன மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தபட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. 

இங்கு தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களான ஊத்தங்கரை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். 
 
 இந்நிலையில் தருமபுரி அடுத்த முத்தம்பட்டி அருகே உள்ள சிக்கம்பட்டி பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியான பழனிசாமி என்பவர் கடந்த 30 ந் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மேலும் அவருக்கு திடீரென மூச்சு தினறல் ஏற்பட்டு அவதிக்குள்ளானார். அதனையடுத்து அவருடன் இருந்த  மகன் இரவு நேர பணியில் இருந்த மருத்துவரை அணுகி சிகிச்சை அளிக்க கேட்டுள்ளார். ஆனால் மருத்துவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் அவர் வர மறுத்துள்ளார். ஒரு செவிலியர் மற்றும் உதவியாளர் வந்து முயற்சி செய்துள்ளனர். 

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பழனிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த விரக்தியில் பழனிசாமியின் மகன் மருத்துவர் உறங்கி கொண்டு இருந்ததையும் அவசர சிகிச்சை பிரிவில் இரவு பணியில் யாரும் இல்லாததையும் தனது செல் போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரவிவிட்டார். இதனால் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் நடந்த சம்பவம் தருமபுரி  மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க   } முழுக்க முழுக்க திராவிட வெறுப்பும், ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த ஆதரவு கொண்ட ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யலாம் - எஸ்டிபிஐ கட்சி

இறைவனுக்கு நிகராக மருத்துவரை கருதும் இந்த சமுகத்தில் தன்னுடைய கடமையை மருத்துவர் ஒருவர் தவறியதால் அநியாயமாக ஒரு உயிர் பறிபோனது. தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  தனியார் மருத்துவமனைக்கு நிகராக அனைத்து வசதிகளும் உண்டு.  இருந்தும்,  பணம் வசதி இல்லாத ஏழை எளிய பொது மக்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை மருத்துவர்கள் போதிய சிகிச்சை அளிக்காமல் அலட்சியபடுத்தும் செயல் தொடர்ந்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் மருத்துவ துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும், இம்மாதிரி கடமை தவறிய மருத்துவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கபட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதையும் படிக்க      }  "மகன் உயிரிழந்த தகவல் கூட எங்களுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை..."