பணி நேரத்தில் பெண்ஊழியருடன் சல்லாபத்தில் ஈடுபட்ட டாக்டர்... மற்றொரு பெண்ணை காவலுக்கு வைத்து துன்புறுத்தியது அம்பலம்..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பணி நேரத்தில் தற்காலிக பெண்ஊழியருடன் சல்லாபத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

பணி நேரத்தில் பெண்ஊழியருடன் சல்லாபத்தில் ஈடுபட்ட டாக்டர்...  மற்றொரு பெண்ணை காவலுக்கு வைத்து துன்புறுத்தியது அம்பலம்..

தூத்தக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தலில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருவத்துவராக பணியாற்றி வருபவர் குருசாமி இவர் இளையரசனேந்தலில் தனியாக ஸ்ரீ முத்தையா கிளினிக்  என்ற பெயரிலும் மருத்துவமனை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றும் தூய்மை பணியாளர் ஒருவருடன் பணிநேரத்தில் அடிக்கடி நெருக்கமாக  இருந்து வருவதாகவும், அந்த நேரத்தில் சிகிச்சை பெற வரக்கூடிய நோயாளிகள் அறைக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக அதே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்று வரும் பெண்ணை   வாசலுக்கு வெளியில் பாதுகாப்புக்கு நிற்க வைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் பணி நேரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியாளருடன் மருத்துவர் குருசாமி நெருக்கமாக இருக்கும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த சூழ்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் பாதிக்கபட்ட பெண், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் மருத்துவர் குருசாமி மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் மருத்துவரும், தற்காலிக பணியாளராக பணியாற்றும் தூய்மை பணியாளருடன் இருப்பதை தான் பார்த்து விட்டதால் தன்னை பழிவாங்கும் விதமாக தினந்தோறும் இருவரும் உள்ளே சென்றதும், அறைக்குள் யாரூம் செல்லாமல் இருக்கும் வகையில் தன்னை பாதுகாவலுக்காக வெளியே நிறுத்தி வைத்து மன உளைச்சளை ஏற்படுத்தி வருவதாகவும், மேலும் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோவை தான் எடுத்துவிட்டேன் என கூறி தனது செல்போனையும் திருடி வைத்து விட்டதாகவும், தனக்கு விடுமுறை கூட கொடுக்கமால் வேண்டும் என்றே தன்னை பல்வேறு வகையில் துன்புறுத்தி வருவதாகவும், தான் அவருக்கு அடி பணிய வேண்டும் என்று நினைக்கிறார்.

அதற்கு நான் மறுக்கவே தன்னை மருத்துவர் அவதிப்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பணி நேரத்தில் மருத்துவ பணியாளர்கள் இருந்தாலும் அவர்கள் அருகே உறங்குவது என பல இன்னல்களை கொடுத்து வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது

நீலவேணியின் புகாரை பெற்று கொண்ட போலீசார் அசிங்கமான வார்த்தையினால் அவதூறாக பேசுதல், கொலை மிரட்டல், செல்போன் காணமால் போனது, பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மருத்துவர் குருசாமியை கைது செய்துள்ளனர்.