''திமுக எம்பி-க்களை கொள்ளை அடிக்க பயன்படுத்த வேண்டாம்'' - முன்னாள் அமைச்சர் பொன்னையன்.

''திமுக எம்பி-க்களை கொள்ளை அடிக்க பயன்படுத்த வேண்டாம்'' - முன்னாள் அமைச்சர் பொன்னையன்.

அதிமுக மாநாட்டில் பங்கேற்பதற்காக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில்:

மாநாட்டிற்குப் பிறகு கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு:

தேர்தலுக்கு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்புதான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். 

மாநாடன்று நீட்டுக்கு எதிராக திமுக போராட்டம் குறித்த கேள்விக்கு:

திமுக  திருடர்கள் என்று உங்களுக்கு தெரியும்.டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த காந்திசெல்வன் தான் வீட்டுக்கு அனுமதி கொடுத்து சட்டமாக நிறைவேற்றியது. அப்போது காங்கிரஸ் அமைச்சரவையில் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், காந்தி செல்வன் உள்ளிட்டோர் இருந்தனர்.

தமிழக மக்கள் முட்டாள்கள், மறதியில் இருக்கிறார்கள், அவர்களை ஏமாற்றி விடலாம் என்று தப்பு கணக்கு போடுவதற்கு காரணம் திமுகவினர் பணபலம் மிக்கவர்களாக இருப்பதால்தான்.

அடிக்க,அடிக்க அம்மியும் நகரும் என்கிற தத்துவத்தை போல பொய்யை சொல்லச் சொல்லி மக்களை முட்டாள் ஆக்கலாம் என்று நீட்டுக்கு எதிராக போராடலாம் என்று நினைக்கிறார்கள். மக்கள் இளைஞர்கள் மாணவர் சமுதாயம் அவர்களை ஏற்காமல் அவர்கள் முகத்தில் கறியை பூசுவார்கள்.

கச்சத்தீவு விவகாரத்தில் முதல்வர் பேசி உள்ளது குறித்த கேள்விக்கு:

முதல்வருக்கு மூளை கோளாறு வந்து விட்டது என்று மக்கள் என்ன ஆரம்பித்து விடுவார்கள். கச்சத்தீவு நேரத்தில் பிரபாகரனுக்கும், கருணாநிதிக்கும் ஆகாது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் விடுதலைப் புலிகளுக்கு எவ்வளவு நிதி உதவிகளை வழங்கினார்.

ஆனால் கருணாநிதி கொடுத்த கொஞ்ச நிதியையும் விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் திருப்பி எறிந்து விட்டார்கள். அதனால் அவர்கள் மீதான கோபத்தில் கச்சத்தீவை தாரை வார்த்து விட்டார் கருணாநிதி.

மக்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி தான் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தினகரன் கூறியது குறித்த கேள்விக்கு:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து தெரியாமல் கொள்ளையடித்த பணம் இருக்கிற காரணத்தால் பண திமிரில் அப்படிப்பட்ட பொய்யைச் சொல்கிறார். மாநாட்டிற்கு வருபவர்களிடம் நீங்களே நேரடியாக கேள்வி கேளுங்கள்.

நீட் தேர்வுக்கான நிரந்தர தீர்வு குறித்த கேள்விக்கு:

திமுகவின் எம்பிக்களை கொள்ளை அடிப்பதற்கு பயன்படுத்தாமல் பாராளுமன்றத்தை முடக்கி நீட் தேர்வுக்கு விதிவிலக்கு பெற வேண்டும். 

நீட் விவகாரத்தில் அதிமுக குரல் கொடுக்குமா என்ற கேள்விக்கு:

உச்ச நீதிமன்றத்தில் குரல் கொடுத்து வழக்கு தொடர்ந்தோம் 22 நாட்கள் பாராளுமன்றத்தை முடக்கியதில் இது முக்கியமான விஷயம் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க   | உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்கும் நடிகர் ரஜினி காந்த்!!