என்னது பெண்ணோட வயித்துல...இவ்வளவு பெரிய கட்டியா...எத்தன கிலோ தெரியுமா..? கேட்டா ஷாக் ஆயிடுவிங்க

பெண்ணின் வயிற்றில் இருந்த 18 கிலோ எடை கொண்ட கட்டியை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்னது பெண்ணோட வயித்துல...இவ்வளவு பெரிய கட்டியா...எத்தன கிலோ தெரியுமா..? கேட்டா ஷாக் ஆயிடுவிங்க

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு  முன்பு  45 வயது கொண்ட பெண்மணி ஒருவர் தீராத வயிற்று வலி மற்றும் வயிறு வீக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.  

அப்போது அந்த பெண்ணை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வயிற்றில் ஒரு பெரிய கட்டி இருப்பதை உறுதி செய்தனர். இதனைத்தொடர்ந்து அந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தனர். 

இந்நிலையில் அறுவை சிகிச்சையில் கைதேர்ந்த  நிபுணர் நதீம் அஹ்மத் என்பவர் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தார். அதில் அவர் வயிற்றில் இருந்த 20 செ.மீ விட்டம் கொண்ட 18 கிலோ எடை கொண்ட கட்டியை  மருத்துவர்கள் அகற்றினார்கள்.  அறுவை சிகிச்சை செய்ததையடுத்து, அந்த பெண் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.