சட்டசபையில் திமுக மூத்த அமைச்சரின் ரசனையும் புறக்கணிப்பும்....!!!

சட்டசபையில் திமுக மூத்த அமைச்சரின் ரசனையும் புறக்கணிப்பும்....!!!

தமிழ்நாடு சட்டசபையின் 2023ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது.  கூட்டம் தொடங்கியவுடன் ஆளுநருக்கு எதிராக கடும் எதிர்ப்பை தெரிவித்த திமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தமிழ்நாடு வாழ்க என கோஷம் எழுப்பியதோடு சட்டசபையை விட்டு வெளிநடப்பும் செய்தனர். 

ரசித்த துரைமுருகன்:

இவர்களை திமுகவின் அமைச்சர் துரைமுருகன் சமாதானப் படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமைதியாக அமர்ந்திருந்து ஆளுநருக்கு எதிரான முழக்கத்தை ரசித்து கொண்டிருந்ததாகவே தெரிகிறது.

கண்டுகொள்ளாத துரைமுருகன்:

இதையடுத்து ஆளுநர் தனது உரையை வாசிக்கத் தொடங்கியதும் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த டேப்லெட்டை ஆன் செய்து ஆளுநர் உரையை கவனமாக படித்து கொண்டிருந்த நிலையில் மூத்த அமைச்சர் துரைமுருகனோ டேப்லெட்டை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு ஆளுநரை பார்ப்பதும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை பார்ப்பதுமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஓரமாக வைத்துவிட்டு:

சட்டசபை கூட்டத் தொடர் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யபடுகிறது என்பதை அறிந்தும் அவர் தன்னிலை மாற்றிக் கொள்ளாமலேயே நடந்து கொண்டதாக தெரிகிறது.  முதலில் அவருக்கு தரப்பட்டிருந்த டேப்லெட்டை கையில் எடுத்து அதை ஆன் செய்ய முயன்ற துரைமுருகன், பிறகு அதை அப்படியே ஓரமாக வைத்துவிட்டார். 

அனைவருக்கும் டேப்லெட்:

காகிதமில்லா சட்டசபை என்ற முயற்சியின் அடிப்படையில்  ஆளுநர் உரையின் பதிப்பு காகிதத்தில் வழங்கப்படாமல் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு டேப்லெட்டில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  தமிழ்நாட்டில் வரவுள்ளது புதிய துணைநகரம்...எங்கே? எப்போது?