தமிழகத்தில் நாளை தொடங்கவுள்ள சட்டசபை கூட்டத்தொடர்.. முக்கிய பிரச்சனைகள் தொடர்பான விவாதம்?

தமிழகத்தில் நாளை தொடங்கவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில் முக்கிய பிரச்சனைகள் தொடர்பான விவாதங்கள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நாளை தொடங்கவுள்ள சட்டசபை கூட்டத்தொடர்..  முக்கிய பிரச்சனைகள் தொடர்பான விவாதம்?

2022 - 23ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த மாதம் 18ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதை தொடர்ந்து 19ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இரண்டு பட்ஜெட் மீதும், 24-ம் தேதி வரை விவாதம் நடத்தப்பட்டதை தொடர்ந்து அமைச்சர்கள் பதிலுரைக்கு பின், சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், துறை வாரியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தி, துறைகளுக்கு நிதி ஒதுக்கியதற்கு ஒப்புதல் பெற, நாளை முதல் மீண்டும் சட்டசபை கூடுகிறது.

இதற்கிடையே சட்டசபை கூட்டத்தொடரில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்க எதிர்க்கட்சிகள் மும்முரம் காட்டுவதால் 22 நாட்கள் நடைபெறும் இந்த சட்டசபை கூட்டத்தொடரில் பரபரப்புக்கும், சலசலப்பிற்கும் பஞ்சம் இருக்காது.

சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் விடுமுறை நாட்கள் போக, மொத்தம் 22 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைப்பெற உள்ளது. கேள்வி நேரம் மற்றும் அவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் வெளியிடும் அறிவிப்புகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.