தட்டித்தூக்குடா ...!தாராபுரம் பாராளுமன்றத்தேர்தல் ...! திமுகவினர் ஆலோசனைக்கு கூட்டம்..!

தட்டித்தூக்குடா ...!தாராபுரம் பாராளுமன்றத்தேர்தல் ...!  திமுகவினர் ஆலோசனைக்கு கூட்டம்..!

தாராபுரம் நடக்க இருக்கும்  பாராளுமன்றத் தேர்தலில் 40க்கு 40  வெற்றி என பெற திமுகவினர் கடுமையாக பாடுபட வேண்டும் அமைச்சர் அறிவுருத்தல்!


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் தெற்கு மாவட்டத்தில்  திமுக சார்பில் தாராபுரம் நகர,ஒன்றியம் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகளுக்கான செயற்குழு  கூட்டத்தில்  ஒவ்வொரு வாக்கு சாவடிகளில் 20 சதவீதம்  புதிதாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என கூட்டத்தில் அமைச்சர் வழியுறுத்தினர்.


திருப்பூர் தெற்கு மாவட்ட தாராபுரம் திமுக சார்பில் நகரம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சிக்கான கூட்டம் தாராபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் தலைமை தாங்கினார்.மாவட்ட அவைத் தலைவர் ஜெயராமகிருஷ்ணன் மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி பெரியசாமி, தாராபுரம்  தொகுதி தேர்தல் பார்வையாளர் மாநில நெசவாளர் அணி செயலாளர்  நாகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ் தனசேகர், மாநில மகளிரணி செயலாளர் சத்யா பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

அப்போது தமிழ்நாடு செய்திதுறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். 
 கூட்டத்தின் போது  அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறியதாவது, தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் கடந்த முறையை போல 40க்கு 39என்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் போல் இல்லாமல் இந்த முறை 40க்கு 40 என்ற இலக்கை பெற வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நமக்கெல்லாம் உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி தாராபுரம் தொகுதி பொறுப்பாளராக மாநில நெசவாளர் அணி செயலாளர் பொள்ளாச்சி நாகராஜ் நியமிக்கப்பட்டு அவர் தலைமையில் ஒவ்வொரு பூத் கமிட்டி நிர்வாகிகளும் தவறாமல் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் குறைந்தபட்சம் 20 சதவீதம் குறையாமல்  புதிய உறுப்பினர்களை வரும் 20 நாட்களுக்குள் அந்தந்த பகுதி நகரச் செயலாளர் ஒன்றிய செயலாளர் மற்றும் பேரூராட்சி செயலாளர்கள் தலைமையில் கிளைக் கழக உறுப்பினர்கள் கட்டாயம் நாளை முதல் தீவிரமாக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் முதல் அமைச்சர் மு. கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு நிர்வாகிகள் சிறப்பாக கொண்டாட வேண்டும் மேலும் தங்களுக்கு முடிந்த உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும்  என இவ்வாறு பேசினார்.கூட்டத்தின் போது ஒன்றிய செயலாளர் எஸ். வி செந்தில் குமார், நகர செயலாளர் எஸ்.முருகானந்தம் குளத்துப்பாளையம் பேரூராட்சி செயலாளர் கே.கே துரைசாமி, சின்னக்காம் பாளையம் பேரூராட்சி செயலாளர் பன்னீர்செல்வம் தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன்,பேரூராட்சித் தலைவர் சுதா கருப்புசாமி தாராபுரம் அவை தலைவர் கதிரவன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் ஹடெக் அன்பழகன், ஆனந்தி, தொண்டரணி அப்பாஸ் அலி, ஷாஜகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க :பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய உத்தரவு... காரணம் என்ன?!!