அரசு பள்ளிகளை ஆக்கிரமித்துள்ள கல்வி துறை அலுவலகங்கள்.. இடமாற்றம் செய்ய வேண்டுகோள்...

அரக்கோணத்தில் அரசு பள்ளிகளை ஆக்கிரமித்துள்ள கல்வி துறை அலுவலகங்களை இடமாற்றம் செய்ய வேண்டுமென கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு பள்ளிகளை ஆக்கிரமித்துள்ள கல்வி துறை அலுவலகங்கள்.. இடமாற்றம் செய்ய வேண்டுகோள்...

அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் வட்டார கல்வி அலுவலகம்  மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வரும் மாவட்ட கல்வி அலுவலகம்  ஆகியவற்றை தமிழக கல்வித் துறை உடனடியாக இடமாற்றம் செய்து மாணவ, மாணவிகளின் வகுப்பறை இட பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டுமென்று ஆசிரியர்கள்,  கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்கள்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 19 மாதங்களுக்கு பின் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் நாளை முதல் திறக்கப்பட்டு முழுமையாக செயல்பட உள்ளன.

கொரோனா ஊரடங்கால் பலரும் வாழ்வாதாரம் இழந்து தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கல்வி கட்டணம் செலுத்த வசதியின்றி அரசு பள்ளிகளில் தங்களது பிள்ளை அதிகளவில் சேர்த்துள்ளனர்கள்.

அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து தற்போது 725 மாணவர்கள் உள்ளனர்கள். பள்ளியில் பல பழுதடைந்த  கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்படாமல் இடப்பற்றாக்குறை உள்ளது. 

இந்நிலையில் அந்த பள்ளி கட்டிடத்தை ஆக்கிரமிப்பு செய்து அரக்கோணம் வட்டார கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. மேலும் இரண்டு வகுப்பறைகள் அனைத்து அரசு தனியார் பள்ளிகளின் தேர்வுதாள் வைப்பறையாக நிரந்தரமாக பூட்டப்பட்டுள்ளது.

இதே போல் அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதிகளவில் ஏழை எளிய மாணவிகள் சேர்ந்து தற்போது 750 க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளனர்கள். அங்கு பள்ளி வகுப்பறை  கட்டிடங்களை அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலகம் ஆக்கிரமிப்பு செய்து இயங்கி வருகின்றது. இந்த இரு அலுவலகங்களும் பள்ளிகளில் செயல்படுவதால் மாணவ, மாவிகளுக்கு இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மேலும் பலவித பணிகள் காரணமாக கல்வித் துறை அலுவலகங்களுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வந்து செல்வதால் அதன் சத்தத்தால் மாணவர்களுக்கு கவன சிதறல் ஏற்படுவதாகவும் வகுப்பறை பற்றாக்குறை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாடு அரசு உடனடியாக இரு பள்ளிகளில் உள்ள கல்வித்துறை அலுவலகங்களை இடமாற்றம் செய்ய வேண்டுமென ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்கள்.