தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்கள்!!

டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை டெங்குவால் பாதிக்கப்பட்டு 363 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் 54 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஆயிரம் இடங்களில் இன்று டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி, காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த முகாம்கள் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது.

இதனிடையே, வீடு வீடாக சென்று டெங்கு, ப்ளூ காய்ச்சல் தொடர்பாக ஆய்வு செய்யவும் மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.  

மழைக் காலங்களில் கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை அடியோடு அகற்றும் வகையில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.