துறைமுக சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்..!

துறைமுக சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதை  கைவிட கோரி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்..!

தூத்துக்குடி பழைய துறைமுகம் முன்பாக அனைத்து துறைமுக சம்மேளனங்களின் அகில இந்திய தலைவர்கள் மற்றும் துறைமுக தொழிலாளர்கள் ஓய்வூதியர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து துறைமுக சம்மேளனங்களின் அகில இந்திய தலைவர் முகம்மது ஹனீப் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து அனைத்து துறைமுக சம்மேளனங்களின் அகில இந்திய  தலைவர்கள் மற்றும் துறைமுக தொழிலாளர்கள் ஓய்வூதியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, 1.1.2022 முதல் அமல்படுத்த வேண்டிய துறைமுக தொழிலாளர் ஊதியஉயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும், இரண்டு ஆண்டுகள் நிலுவையில் உள்ள போனஸ் பிரச்சனையை பேசிதீர்க்க வேண்டும், துறைமுகத்தின் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், துறைமுக சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிட வேண்டும். 

இதையும் படிக்க    } கள்ளச்சாராய விற்பனை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - முதலமைச்சர் அதிரடி!

அதோடு,  1.01.2004 -க்கு பின்னால் பணியில் சேர்ந்த தொழிலாளர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கொச்சின் துறைமுக சம்மேளன தலைவர் நரேந்திரராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்த அவர், விரைவில் ஒருநாள்  அடையாள வேலைநிறுத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.

இதையும் படிக்க    } 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்...வெளியாகும் தேதியில் அதிரடி மாற்றம்!