மத்திய அரசை கண்டித்து தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம்: பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பு  

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் ஜூலை 5ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தேமுதிக  அறிவித்துள்ளது.

மத்திய அரசை கண்டித்து தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம்: பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பு   

இது தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்தும் கொரோனோ தொற்று பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும்  கட்டுமான பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் மின்சாரம் போன்ற விலைவாசி உயர்வை கண்டித்தும் தேமுதிக சார்பில் வரும் 5-ஆம் தேதி காலை 10 மணி அளவில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல் துறை அனுமதியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் 31 மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது. டீசல் விலையும் 100 ரூபாயை நெருங்குகிறது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மின்சார கட்டணம் அதிகரிப்பு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்டவை எதிர்ப்பை கிளப்பியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்போது தேமுதிக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.