டெண்டருக்காக பள்ளி கட்டிடங்கள் இடிப்பு - மறைமுகமாக ஒப்பந்தம் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்......

டெண்டருக்காக பள்ளி கட்டிடங்கள் இடிப்பு - மறைமுகமாக ஒப்பந்தம் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்......

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்தில் டெண்டர் விடுவதற்கு பள்ளி கட்டிடங்கள் இடிப்பு. கண்டுகொள்ளாத  அதிகாரிகள். 

பள்ளி கட்டிடங்கள் இடிப்பு

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட களரி, நல்லிருக்கை, கொம்பூதி, குதக்கோட்டை, திரு உத்தரகோசமங்கை ஊராட்சிகளில் உள்ள பழுதடைந்த அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளிகளின் கட்டடங்களை இடிக்க திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ஒப்பந்தப்புள்ளி கோரி ஒரு அறிவிப்பினை கடந்த 30ம் தேதி வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பினை அங்கு பதிவு செய்யப்பட்ட அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் தபால் மூலம் அனுப்பிவிட்டு அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகைகளும் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் திருப்புல்லணி ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடங்களை இடித்தல் 2022-2023 ஆம் ஆண்டுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, கீழ்க்கண்ட வேலைக்கான மூடிய முத்திரையிட்ட ஒப்பந்தப்புள்ளி பதிவு பெற்ற தகுதியுள்ள ஒப்பந்ததாரர்கள்   இன்று 8ஆம் தேதி புதன்கிழமை பிற்பகல் 4.30 மணிக்குள்  அனுப்ப வேண்டும் என்றும்  திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சி அல்லது அவரது அங்கீகாரம் பெற்ற அலுவலரால் 9.2.2023 ஆம் தேதி வியாழன் கிழமை பிற்பகல் 4.30 மணி அளவில் நேரில் ஆஜராகி ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானங்கள்.... அப்புறப்படுத்தப்படுமா?

இந்த பணிக்காக  சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு மதிப்பீட்டு தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஒப்பந்தம் விடுவதற்கு முன்பாகவே கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நல்லிருக்கையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கட்டிடம் இடித்துவிட்டு தற்போது பிரேஸ் மட்டம் அளவிற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது. வீரன் வலசை, கொம்பூதி ஆகிய பகுதிகளில் கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டது. மேலும் களரியில் பாதி இடித்த நிலையில் உள்ளது. 


இது குறித்து அப்பகுதியினர் டெண்டர் விடும் முன்பே ஒப்பந்ததாரர் யார் என்பது  முடிவு செய்யப்பட்டதா என சந்தேகம் உள்ளது என்கின்றனர்.இது தொடர்பாக மாவட்ட ஆ ஆட்சியர்  ஜானிடாம் வர்க்கீஸ் கூறுகையில் ....

மேலும் படிக்க |மேட்ரிமோனியல் கொள்ளையன்.... சிக்கியது எப்படி?

சம்பந்தப்பட்ட புகார் தொடர்பாக உரிய விசாரணை செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்பழைய பள்ளி கட்டிடங்களை  டெண்டர் விடும் முன் இடுக்கப்பட்டது திருப்புல்லாணி ஒன்றிய அளவில் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.