"மகன் உயிரிழந்த தகவல் கூட எங்களுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை..."

"மகன் உயிரிழந்த தகவல் கூட எங்களுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை..."

சவுதியில் உயிரிழந்த இளைஞரின் உடலை பெற்று தர கோரி குடும்பத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்

சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் பகுதியில் நேர்ந்த தீ விபத்தில் சிக்கி இந்தியாவை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர். இவர்களில் இரண்டு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களில் ஒருவரான சீதாராமன் சேலம் போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவராவார். 

கடந்த திங்கட்கிழமை அன்று தான் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் சீதாராமன் பொறியாளராக பணியில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் அவர் தங்கி இருந்த அறையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி  உயிரிழந்து விட்டார் என்ற தகவல் அவர்களது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

சவுதி அரேபியாவில் உயிரிழந்த மகன் உடலை மீட்க கோரி பொற்றோர் மனு - ARASIYAL  TODAY

இந்த நிலையில், தங்கள் மகன் உயிரிழந்த தகவல் கூட தங்களுக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை என்றும் இதுவரை அங்கு என்ன நிலவரம் என்பதும் தெரியவில்லை என்றும் எனவே அரசு தங்கள் மகனின் சடலத்தை மீட்டு ஒப்படைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சீதாராமன் குடும்பத்தினர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இதையும்  படிக்க      } தி கேரளா ஸ்டோரி - உண்மை சம்பவம் - கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு - இந்து முன்னணி...

மேலும், வேலைக்காக வெளிநாடு சென்று ஒரு வாரத்துக்குள்ளாகவே சீதாராமன் விபத்தில் சிக்கி உயிரிழந்ததால் அவரது குடும்பம் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். சீதாராமனுக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும்  படிக்க      }  மழைநீர் தேங்காமல் இருக்க 2 நாட்களில் கால்வாய் - அமைச்சர் பேட்டி